Friday, February 18, 2011

NDTV's Entertainer of the Decade: Rajinikanth



என்டிடிவி குழுமத்தின் 'இந்த தசாப்தத்தின் சிறந்த பொழுதுபோக்குக் கலைஞர்' விருது ரஜினிக்கு வழங்கப்பட்டுள்ளது.



பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு என்டிடிவி குழுமம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த இந்தியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இதில் மிக உயர்ந்த 'கடந்த 10 ஆண்டுகளின் சிறந்த பொழுதுபோக்காளர் (Entertainer of The Decade)' விருதினை ரஜினிக்கு வழங்கியது என்டிடிவி.

நிறுவனத்தின் தலைவரும் பிரபல பத்திரிகையாளருமான பிரணாய் ராய் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இந்த விருதினை ரஜினிக்கு வழங்கினர்.

இந்த விருதினை ரஜினிக்கு வழங்குவதை தனது தனிப்பட்ட, மறக்கமுடியாத அனுபவம் என்று குறிப்பிட்ட என்டிடிவி தலைவர் பிரணாய் ராய், ரஜினியைப் போன்ற வெற்றிகளைக் குவித்தவர் யாருமில்லை என்றும், மற்ற எவரும் அவரது வெற்றியைத் தொடுவதைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்றும் கூறினார்.

நடிகர் அஜய் தேவ்கன் ரஜினி பற்றிக் கூறும்போது, 'இந்தியாவுக்கே பெருமை சேர்த்திருப்பவர் ரஜினி. உலகின் மிகச் சிறந்த நடிகர் அவர். அவரது வெற்றியை யாராலும் நெருங்க முடியாது," என்றார்.

"ரஜினி நிற்கும் இந்த மேடையில் நிற்பதை எனது வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன்," என்றார் நடிகை கத்ரீனா கைப்.

நடிகை வித்யாபாலன் கூறுகையில், "ரஜினி சாருடன் இணைந்து இந்த விழாவில் நாங்களும் விருது பெறுவது நிஜமா கனவா என என் தாயார் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்கிறார். ரஜினி என்பவர் ஒரு அபூர்வ மனிதர், நிஜமான சூப்பர் ஸ்டார், நமது பெருமை" என்றார்.

சிறந்த தென்னிந்திய நடிகை விருதினைப் பெற்ற த்ரிஷா, "உலகில் ரஜினியைப் போன்ற மாபெரும் கலைஞரைப் பார்த்ததில்லை. அவர் காலத்தில் நான் நடிகையாக இருப்பதே பெருமை", என்றார்.

பின்னர் தனக்கு வழங்கப்பட்ட விருது குறித்து ரஜினி கூறுகையில், "இந்த விருதுக்கும் பெருமைக்கும் காரணம் எனது தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்தான். நான் ஒரு கருவிதான். என்னை இயக்கும் இறைவனுக்கு நன்றி" என்றார்..

ஏற்கெனவே 2007-ம் ஆண்டு என்டிடிவியின் இந்தியாவின் சிறந்த பொழுதுபோக்காளர் விருது ரஜினிக்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விருது வழங்கும் போது பிரணாய் ராய் ரஜினியிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு ரஜினி அளித்த பதில்களும்:

பிரணாய்: எந்திரன் / ரோபோ மிகப் பெரிய வெற்றியை அடைந்துள்ளது. பாலிவுட்டின் டாப் பிரபலங்கள் ஒன்று சேர்ந்தால்கூட உங்கள் படத்தின் வெற்றியைத் தொட முடியாத நிலை. இதுவரை வந்த படங்களில் எந்திரனை பெஸ்ட் என்று சொல்வீர்களா?

ரஜினி: இதுவரை நடித்த படங்களில் என்று பார்த்தால், எந்திரன் சிறந்த படம்தான்.

பிரணாய்: இந்த விஸ்வரூப வெற்றியை எதிர்ப்பார்த்தீர்களா?

ரஜினி: உண்மையிலேயே இந்த வெற்றியை நான் எதிர்ப்பார்த்தேன். அதே நேரம் இத்தனை பிரமாண்ட வெற்றியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.


பிரணாய்: இந்த வெற்றி உங்களுக்கான அங்கீகாரத்தை விஸ்தரித்துள்ளதாக நினைக்கிறேன். உங்கள் கருத்தென்ன சிதம்பரம் அவர்களே...

சிதம்பரம்: நிச்சயமாக. ரஜினி மற்ற மொழிகளிலும் நடித்துள்ளவர். இந்தப் படம் (எந்திரன்) பிற மொழிகளிலும் வந்துள்ளது. இந்தியாவில் அதிக வசூல் குவித்த படம். அதுவும் இந்த தசாப்தத்தின் மிகச் சிறந்த பொழுதுபோக்காளர் ரஜினி படம்.

இந்த பதிலை சிதம்பரம் சற்று தடுமாற்றத்துடன் சொன்னார்.

உடனை மைக்கை வாங்கிய பிரணாய், சிதம்பரம் இப்படி தடுமாற காரணம், நீங்கள் (ரஜினி) எப்போது வேண்டுமானாலும் அரசியலுக்குள் வரலாம் என்பதால் இருக்கலாம்... என்று சிரித்தபடி கூற, உடனே ரஜினியும் சிரித்தார்.

அடுத்த நொடியில் மீண்டும் மைக்கை வாங்கிய சிதம்பரம், "1996ல் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று உறுதியாக எதிர்ப்பார்த்தேன் நான். அது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. எனக்கும் உங்களுக்கும் ஏன் அவருக்கும்கூட அது நன்றாகத் தெரியும். அவர் அப்போது வந்திருக்க வேண்டும்.." என்றார்.

உடனே பிரணாய், "அவர் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவர் (சென்சிடிவ்) என்பதால் வரவில்லையோ?" என்றார் ரஜினியின் தோளில் கை வைத்தபடி.

"நாங்கள் சென்சிபிளாக இல்லை என்பதால் அரசியலுக்கு வந்ததாகவோ, அவர் சென்சிடிவ் என்பதால் அரசியலுக்கு வரவில்லை என்றோ சொல்ல முடியாது. ஆனால் இப்போது வந்தாலும் அவர் மகத்தான வெற்றியைப் பெறுவார் (clean sweep)" என்றார் சிதம்பரம்.

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அரசியலுக்கு வரும் திட்டம் உண்டா என்று பின்னர் பிரணாய் ராய் நேரடியாக ரஜினியைக் கேட்டபோது, கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார் ரஜினி வழக்கம்போல.

Congrats Thalaivaa !!!!

Friday, February 11, 2011

ரஜினிகாந்த்... சில தகவல்கள்

தனது தாய்மொழி மராத்தி என்றாலும் அம்மொழிப்படங்களில் இதுவரை அவர் நடித்ததே இல்லை.

ரஜினி ஒரு சிறந்த தச்சர். மர வேலைப்பாடுகளில் இவர் கில்லாடி.

பேருந்து நடத்துநராகப் பணியாற்றிய காலத்தில் பயன்படுத்திய பொருட்களை இன்றும் பாதுகாத்து வருகிறார்.

1995&ல் வெளியான ‘முத்து’ படம் மூலமாகத்தான் தமிழ் சினிமா முதன் முறையாக ஜப்பானிற்குள் நுழைந்தது.

2006&ல் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்ட நம் பிரதமர் மன்மோகன் சிங், இந்தியா, ஜப்பான் ஆகிய இரு நாடுகளின் நட்புறவைப் பற்றிப் பேசுகையில் ஜப்பானில் ‘முத்து’படத்தின் வெற்றியைப் பற்றியும் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

இந்தியாவிலேயே அதிக ரசிகர் மன்றங்களைக் கொண்டிருக்கும் சூப்பர் ஹீரோ ரஜினி.ஏறக்குறைய எண்பதாயிரம் ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன.

2007&ல் பிரபல ஆங்கில இதழான ஏஸியா வீக் ரஜினியை ‘தெற்கு ஆசியாவில் மிகவும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நபர்களில் ஒருவராக’ தேர்ந்தெடுத்தது.

2007&ல் மகாராஷ்ட்ரா மாநில அரசு ரஜினிக்கு ‘ராஜ்கபூர் விருது’ வழங்கி கௌரவித்தது.

VISITOR"S COUNT